வெள்ள நிவாரண பணிகளுக்கு செலவிட்ட ரூ.4 ஆயிரம் கோடி தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்கட்சிகள் குரல் கொடுத்து வரும்
நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் வெள்ளை அறிக்கை வெளியிடலாம் என்று கூறி இருப்பது தான் பலரது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றத்துக்கான அறிகுறியா என்பது தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தி.மு.க.-வி.சி.க. கூட்டணி எவ்வளவு வலுவாக இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த தி.மு.க.வின் அமைப்பு செயலாளார் ஆர்.எஸ். பாரதி, “வெள்ளை அறிக்கை அவசியம் என்றால் வெளியிடுவதில் தவறில்லை என திருமாவளவன் கூறியிருக்கிறார். ஒவ்வொரு கட்சியும் தங்கள் எதிர் கருத்துகளை சொல்வார்கள். எல்லோரும் ஒரே கட்சி இல்லையே. அவர்களுக்கென தனி கொள்கை இருக்கிறது. மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலை வி.சி.க.வுடன் இணைந்தே சந்தித்து உள்ளோம். எங்களின்
கூட்டணி வலுவாக இருக்கிறது என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal