மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 ரேசன் கடைகள் மூலமாக வருகிற 17-ந்தேதி முதல் அரசு வழங்க உள்ளது. இதற்கான டோக்கன் நேற்று
நேற்று பிற்பகல் முதல் ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுமா? இல்லையா? என்ற எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:- குடும்ப அட்டை இல்லாமல் இருந்தாலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் நிவாரணம் பெறலாம். பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் வருமானவரி செலுத்துவோர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். ஆதார் எண், வங்கி எண், வீட்டின் விபரங்கள் உள்ளிட்டவை விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் ரேசன் கடைகள் மூலமாக தான் வழங்கப்படும். * விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள 11 கேள்விகளை பூர்த்தி செய்து வழங்கும்போது ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். * விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினால் தேர்விற்கு பிறகு நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal