திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து காலை 6.30 மணி அளவில் புறப்பட்ட தனியார் பஸ்சும், திண்டிவனத்தில் இருந்து ஆரணிக்கு புறப்பட்ட தனியார் பஸ்சும், வந்தவாசி அடுத்த சடத்தாங்கல் கூட்ரோட்டில் சந்தித்து கொண்டன. அப்போது 2 பஸ்களும் நேர வித்தியாசம் காரணமாக ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்றன. அப்போது பஸ்கள் ஒன்றோடு ஒன்று உரசுவது போன்று இருந்தது. இதனால் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அச்சம் அடைந்து பீதியில் உறைந்தனர். பின்னர் சாலையின் நடுவே ஓட்டுனர்கள் பஸ்களை நிறுத்தி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அங்கிருந்த சில பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். செல்போன்களில் பதிவான வீடியோக்களை சமூக வலைதளங்களில் தற்போது வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இது போன்ற செயல்களில் பஸ் டிரைவர்கள், பயணிகளை அச்சுறுத்த வேண்டாம் எனக் கூறி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal