தி.மு.க.வின் எதிர்காலமும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிலையில், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா இலவச பல் மருத்துவ முகாம் நடத்தி அசத்தியிருக்கிறார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் டி.வி.டி.ஏ. பள்ளியில் நடைபெற்ற இலவச பல் சிகிச்சை மருத்தவ முகாமில், இம்ப்ளான்ட் சிகிச்சை மூலம் இலவச பல்செட்களை முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா வழங்கினார்.
தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. சுற்றுசூழல் அணி மற்றும் கற்பக விநாயகா பல் மருத்துவக் கல்லூரியும் இணைந்து ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் டி.வி.டி.ஏ. நடுநிலை பள்ளியில் இலவச பல் மருத்துவ முகாம் கடந்த 8ம்தேதி மற்றும் 9ம்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடந்தது.
பல் மருத்துவ முகாமை தி.மு.க. மாநில சுற்று சூழல் அணித் தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த மருத்துவ முகாமில் ஆலங்குளம், நல்லூர், குறிப்பன் குளம், காசியாபுரம் உள்பட ஆலங்குளம் தொகுதிக்குபட்ட பெண்கள், இளைஞர்கள் முதியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பல் தொடர்பான சிகிச்சைகளை பெற்றனர்.
நிறைவுநாள் மருத்துவ முகாமில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா கலந்துகொணடு இலவசமாக பல்செட்டுகளை வழங்கினார். பின்னர் இந்த மருத்துவ முகாமில் பணியாற்றிய கற்பக விநாயகா மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவ குழுவிற்கு பூங்கோதை ஆலடி அருணா நன்றி தெரிவித்தார்!
உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி நடந்த பல் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றவர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவையும் மனதார பாராட்டிச் சென்றனர்.