வேளச்சேரி பகுதியில் மழை நீர் தேக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த பகுதி மீட்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழு பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தனது தொகுதி மக்களுக்காக மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த அசன் மவுலானா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘சென்னையின் மொத்த தண்ணீரும் வேளச்சேரி பகுதி வழியாக தான் கடலுக்கு செல்ல வேண்டும். அதிக அளவில் தண்ணீர் வந்தது. ஆனால் கடல் உள்வாங்கவில்லை. இதனால் தான் இவ்வளவு தண்ணீர் தேங்கியது என்பதோடு அங்கு நடந்த ஒரு விபத்தை பற்றி குறிப்பிடும் போது இவ்வளவு பெரிய பேரிடர்கள் வரும்போது இப்படி பட்ட விபத்துக்களும் ஏற்படுவது சகஜம் தான்’ என்று சாதாரணமாக சொல்லி உள்ளார்.
இவ்வாறு இவர் பேசியதால் இப்போது அவரை சிக்கலுக்குள் கொண்டு விட்டுள்ளது. சொந்த கட்சிக்காரர்களும், ஆத்திரப்பட்டது மட்டுமல்லாமல் தி.மு.க.வினரே கோபம் அடைந்து உள்ளனர்.