அதிமுக முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 38 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் நல்லம்மாளுக்கு சிறை உறுதியானது. சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது.

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பரமசிவனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2000ல் விதித்த தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்த போது பரமசிவன் 2015 ஆம் ஆண்டு மரணமடைந்தார். தண்டனை அனுபவிக்கச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal