சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறும்போது, ‘எனக்கும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நேற்று வந்த சினிமா நடிகர்கள் எல்லாம் ஆசைப்படும்போது 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் நான் ஆசைப்படுவதில் தப்பில்லையே’ என்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது பிறந்தநாளில் அவரது ஆதரவாளர்கள் தமிழ்நாடு முழுவதும் நாளைய முதல்வரே என்று போஸ்டரை ஒட்டி அமர்க்களப்படுத்தி விட்டார்கள் காங்கிரஸ் ஓ.பி.சி. துறையை சேர்ந்த நிர்வாகிகள். ஆசைப்படலாம் அதற்காக இப்படியுமா ஆசைப்படுவார்கள்? தி.மு.க. கூட்டணியில் கொடுக்கும் ஏதோ சில தொகுதிகளை வாங்கிக்கொண்டு அரசியல் செய்வார்கள். அதுதான் அவர்களால் முடிந்தது.