மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.பகுதி பொறுப்பாளர் தண்டரை மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பையா, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் மாணிக்கம், சரவணன், மாவட்ட நிர்வாகிகள் திருப்பதி, வெற்றி வேல், ராதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன் வரவேற்றார். இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:- தி.மு.க அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். மக்கள் மீது அக்கறை  இல்லாத அரசாக, செயல்பாடத அரசாக, வளர்ச்சியை பற்றி சிந்திக்காத அரசாக தி.மு.க. உள்ளது. தன்னுடைய வாரிசுகளை மட்டும் பற்றி சிந்திப்பதை கடமையாக கொண்டுள்ள முதலமைச்சரை இந்த நாடு பெற்றிருப்பது வேதனையிலும் வேதனையாக உள்ளது.

மக்கள் இந்த அரசின் மீது அதிருப்தியோடு இருக்கிறார்கள். பூத் கமிட்டி உறுப்பினராக இருக்கின்ற நீங்கள் எதிர்ப்புகளை வாக்குகளாக மாற்ற முடியும். களத்தில் நின்று போராடி எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து இயக்கத்தின் ஆணிவேராக கட்டிக் காக்க கூடியவர்கள் இயக்கத்தின் கிளை செயலாளர்களும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தான். எனவே உங்களை எப்போதும் வலிமையோடு வைத்திருக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் எடப்பாடியார் இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலயமணி, பாண்டுரங்கன், தெய்வதர்மர், தக்காளி முருகன், விசு, ஜெயராமன், மலைச்சாமி, பிச்சை, மூர்த்தி, செந்தில், பாலாஜி, பாஸ்கரன், கருப்பட்டி ராமநாதன் சந்திரபோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கோட்டைமேடு பாலன் நன்றி கூறினார்.






By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal