‘இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றால் ஊழலை முற்றிலுமாக ஒழிப்பேன்’ என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசியிருக்கிறார்.
நவம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, மத்தியப் பிரதேசத்தின் தாமோ நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்றும் கூறினார். அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் மக்கள் காங்கிரஸுக்கு ஆட்சியைக் கொடுத்தனர். ஆனால் அவர்களின் முதல்வர்கள் கருப்புப் பணத்தை உருவாக்குவது எப்படி என்று கண்டுபிடித்தனர்.
2014க்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரம் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு உயர்ந்தது, 200 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளியது என்று மோடி கூறினார். 2014ல் நாங்கள் ஆட்சிக்கு வரும் போது நாட்டின் பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்தது. படிப்படியாக அது 9, 8, 7 மற்றும் 6 வது இடத்திற்கு மாறியது. ஆனால் யாரும் அதைப் பற்றி பேசவில்லை.
200 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி 5வது இடத்தைப் பிடித்ததும், அனைவரும் ஆச்சரியப்பட்டு இந்தியாவை பார்க்க ஆரம்பித்தனர். மூன்றாவது பிரதமராக பதவியேற்றபோது, நாட்டின் பொருளாதாரத்தை உலகின் முதல் மூன்று இடங்களுக்குள் கொண்டு செல்வேன் என்று மோடி கூறினார். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அக்கட்சியின் பிரதமர் கூறியது போல் மாநிலங்களில் 85 சதவீத கமிஷன் முறை செயல்படும் என்றார் பிரதமர் மோடி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மத்திய அரசு வெளியிடும் ஒவ்வொரு 1 ரூபாய்க்கும் 15 பைசா மட்டுமே இலக்கு பயனாளிகளை சென்றடைகிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
ஏழை மக்களுக்கான இலவச ரேஷன் திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருவதாகவும் மோடி கூறினார். “இந்த பாவத்தை அவர்கள் செய்யட்டும், நான் மக்களுக்கு நல்ல பணிகளை தொடர்ந்து செய்வேன். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்று கூறினார் பிரதமர் மோடி.