முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 3ஆம் தேதி முதல் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை. குறிப்பாக, சென்னை பெசன்ட் நகரில், ’நடப்போம் நலன் பெறுவோம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைக்க இருந்த நிலையில், அதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியான நிலையில், சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். பருவகாலத்தில் வரும் வைரஸ் காய்ச்சலால் முதலமைச்சர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் முதலமைச்சர் ஓய்வில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal