தனது சிந்தனை மிக்க எழுத்துக்களால் மறைந்து முதல்வர் ஜெயலலிதா ‘குட்புக்கில்’ இடம்பிடித்தவர் மருது அழகுராஜ். தற்போது, ஓ.பி.எஸ். அணியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கிறார்.

தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் அரசியல் நிகழ்வுகளை அவ்வப்போது கவிதை வடிவில் சுட்டிக்காட்டி வருபவர் மருது அழகுராஜ. இவரது எழுத்துக்களை படிப்பதற்கென்றே தமிழகத்தில் தனிக்கூட்டம் இருக்கிறது என்றால் அது மிகையில்லை!

இந்த நிலையில்தான், ‘‘ஒன்றியம்??’’ என்ற தலைப்பில் தனது வலைதளப் பக்கத்தில், ‘‘தி.மு.க. அடி தொற்றி மத்திய அரசை எடப்பாடியும் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பேசுகிறார்.

ஒரு வேளை கிரீன்வேய்ஸ் சிக்னல் காரணமாக இருக்கலாம். ஆனால் பாஜகவின் வானதி சீனிவாசனும் மத்திய அரசை ஒன்றிய அரசு என விளிப்பது ஏன் எனத் தெரியவில்லை.

ஒருவேளை ஒன்றிய அரசு என்றே தங்களை அழைக்கட்டும் என்ற மன மாற்றத்திற்கு பா.ஜ.க. வந்து விட்டதோ என்னவோ…’’ என்று எழுதியிருந்தார்.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் ‘ஒன்றிய அரசு’ என்று கூறுவதில் வியப்பில்லை. ஆனால், தமிழக பா.ஜ.க.வினரே ‘ஒன்றிய அரசு’ என்று பேசுவதுதாய் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal