‘அமலாக்கத்துறை சோதனையை கண்டு பதுங்கமாட்டேன் சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வேன்’ என்று திமுக எம்.பி. ஆ.ராசா கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் திமுக பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் திமுக எம்பி ஆ ராசா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘2023ல் கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு போய் சேர்த்துள்ளேன் என பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பெருமையாக பேசினார்.

அதற்கு பதிலுறைக்கு தன்னை அனுமதிக்கவில்லை. ஆனால் 53 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு போய் சேர்த்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தமிழகம் 50 ஆண்டுகள் முன்னோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது’’ என்றார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘அமலாக்கத்துறை சோதனைக்கு பதுங்க மாட்டேன். சட்டரீதியாக எதிர்கொள்வேன். அமலாக்கத்துறை சோதனை சாதாரணமாக நடப்பது தான்’’ என்றார்.

இதற்கிடையே கோவையில் அமலாக்கத்துறை ஆ.ராசாவிற்கு சொந்தமான சொத்துக்களை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal