பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுத்துள்ள நிலையில், கோவையில் 4 எம்.எல்.ஏ.க்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை ‘தொகுதி பிரச்னை’ சம்பந்தமாக சந்தித்தனர்.

கூட்டணி முறிவுக்குப் பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் விமர்சகரும், ஓ-.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜ் தனது வலைதள பக்கத்தில் ‘#ஆரம்பிச்சாச்சு’ என்ற தலைப்பில்,

‘‘கூட்டணி முறிந்தது என ஆளுமை அறிவித்த வேகத்துல நான்கு சட்ட மன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க வின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான திருமதி நிர்மலா சீத்தாராமனை சந்திருத்திருக்காங்க..

இந்த சந்திப்புக்கு அவர்கள் ஆளுக்கு ஒரு காரணத்தை சொல்லியிருக்காங்க.. ஒருவர் தொகுதி வளர்ச்சிக்காக போனோம்னு சொல்ல, ரெண்டரை வருசமா வராத தொகுதி வளர்ச்சி குறித்த அக்கறை கூட்டணிய முறிச்ச மூனுநாள்ல கொப்பளிக்குதாக்கும் என்ற கேள்வியை எழுப்ப..

இல்ல இல்ல அது வந்து வேலுமணி அண்ணன் மகன் கல்யாண பத்திரிக்கை வைக்க வந்தோம்னு சொல்ல..

அதெப்படி மணமகனோட குடும்பத்தினர் யாரும் இல்லாம நீங்க பத்திரிக்கை கொடுக்கிறீக என கேட்டதும்…

அது வந்து… அது வந்து… என ஒரே இழுவையாம்.

கிராமத்துல ஒரு பழமொழி சொல்லுவாக ” ஏன்டா தென்ன மரத்துல ஏறுனன்னு கேட்டா மாட்டுக்கு புல்லு புடுங்க போனேன்னு” சொன்ன கதையா இருக்கு மேற்படி கூத்து…

எப்படியோ பா.ஜ.க தன் வேலைய தொடங்கிடுச்சு அப்படித் தானே…?’’என்று முடித்திருக்கிறார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் வேலையில் பா.ஜ.க. இறங்கியிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal