அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- எடப்பாடியுடன் ஒபிஎஸ் சேர்த்தாலும் சேரலாம் நாங்கள் சேரமாட்டோம். எடப்பாடி பழனிச்சாமிக்கு எங்கள் கட்சி மாற்று சக்தியாக செயல்படும். தமிழ்நாட்டில் தீண்டாமை, சாதி சமய வேறுபாடு இல்லை. தனிநபர்களின் செயல்பாடுகளை வைத்து ஆளுநர் அங்கொன்றும் இங்கொன்றும் பேசுவது தவறு. ஜாதி மத வேறுபாடுகளுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எங்களது கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம். ஒபிஸ் எனது பழைய நண்பர், அவர் கோபத்தில் செய்தது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்திருயிந்தாலும் நண்பர் என்ற முறையில் மீண்டும் இணைவது என்பது நாட்டில் நடப்பதுதான்.

அவர் தனித்து முடிவு எடுப்பார். நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம் என மட்டும் தான் கூறியுள்ளோம். ஓபிஎஸ் செயல்பாடு பற்றி எதுவும் சொல்ல முடியாது. எடப்பாடியுடன் கூட்டணி சேரக்கூடாது என 90 சதவீத அமமுகவினர் விரும்புகின்றனர். ஓபிஎஸ் எடப்பாடியுடன் சேர்ந்தாலும் நாங்கள் சேர மாட்டோம். ஓபிஎஸ்சின் சுபாவம் எனக்கு தெரியும். ஆனால், எடப்பாடியின் சுபாவம் எனக்கு தெரியாது. தன்னை பதவியில் வைத்தவர்களையே இழிவாக பேசும் குணம் படைத்தவர். அவர் திருந்துவாரா, மாட்டாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். காவிரி பிரச்னையில் அரசியல் கட்சிகளை தாண்டி அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். கர்நாடகாவில் நடைபெறும் சம்பவங்கள் ஜனநாயகம், நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal