வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் களம் இறங்கப்போவது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில்தான் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார் நடிகர் விஜய். மேலும், இரவு நேர பாட சாலைகளை தொகுதி முழுவதும் துவக்கியிருக்கிறார்.

அவ்வப்போது நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகும் நிலையில், சமீபத்தில், மக்கள் இயக்க இளைஞர் அணி, வழக்கறிஞர்கள் அணி, மக்கள் இயக்க ஐடி விங், மருத்துவர்கள் அணி உள்ளிட்டோருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த நிலையில், ‘‘வரும் அக்டோபர் 2 ஆம் தேதியன்று காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்’’ என மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ‘‘சுதந்திர போராட்ட தியாகிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களை கௌரவப் படுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal