விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது கடும் விமர்சனத்துக்குள்ளானது. நாடு முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் நெட்டிசன்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கொசுவர்த்தி சுருள் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். புகைப்படத்திற்கு கேப்ஷன் எதுவும் இல்லாததால் நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனிடையே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் பதவி விலக கோரி மாவட்டம் முழுவதும் பாரதிய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal