தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்ட விரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் அவரது இலாகாக்கள், மற்ற மந்தரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பதவியில் நீடித்தார். இலாகா இல்லாத மந்திரியாக செயல்படுவார் என தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்- கவர்னர் ஆர்.என். ரவி ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. இறுதியில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதற்கிடையே, இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச், ”செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடிக்க வேண்டும்” எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்தது. மேலும், தார்மீக ரீதியாக இது சரியானது அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal