கவிதை நடையில் அவ்வப்போது எடப்பாடி பழனிசாமியையும், அவரது ஆதாரவாளர்களையும் வறுத்தெடுப்பவர்தான் மருது அழகுராஜ்! சமீபத்தில் ‘தரும் பக்கத்தில் நிற்பதை விட, தர்மம் பக்கத்தில் நிற்க வேண்டும்’ என எழுதியிருந்தார்.
இந்த நிலையில்தான், ‘இதை ஒருமுறை வாசிங்க ஒரு கனம் யோசிங்க..’ என மருது அழகுராஜ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அண்ணாவின் கரம் பற்றி அரசியலுக்கு வந்த தலைவன்.
ஐ.நா.வில் உரையாற்றி அழகு சேர்த்த முதல் தமிழன் அவைத் தலைவர் பண்ருட்டியார் தனது முதிர்ந்த அனுபவத்தால் முயற்சிகளை முன்னெடுக்க.
நிதிக்கு மயங்காத நீதிமானாக சதிக்கு தளராத சக்திமானாக சோழமண்டல தளபதி வைத்தியலிங்கம் சுழன்றுழைக்க..
அம்மாவின் அமைச்சரவையின் அன்றைய விவசாயத் துறை அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் கழகத்து நலத்தையே கருத்தில் கொண்டு களமாட..
மக்கள் திலகத்தின் மனங்கவர்ந்த செல்லப் பிள்ளை ஜே.சி.டி. பிரபாகரன் வியூகங்கள் வகுத்து வெற்றிக்கு விசை கூட்ட…
சேரன்மா தேவி தந்த பாண்டியனாக நீதியை நிலைநாட்ட மன்றாடும் மாவீரனாக மனோஜ் பாண்டியன் மார்தட்டி போர் திரட்ட…
வாக்குகளால் வெல்ல முடியாத வலிமைத் தாயை வழக்குகளால் சாய்த்திட நரி சூழ்ச்சி
நடந்த காலம் யாவும்…
நம்பிக்கை குன்றாத விசுவாசம் என்னும் வாளேந்தி வலம் வந்து அணையிட்டு தடுக்க முடியா அன்னைக்கு பிணைதந்த பெங்களூர் புகழேந்தி ஊடகத் திண்ணைகளில் உக்கிரப் போர் நடத்த…
நடந்து வரும் உரிமை மீட்பு போரில் நாவும் பே”நாவும் கொண்டு கொடுந் துரோக கும்பலின் வாலறுக்க… வேல் ஏந்தி போராடும் வீரனாக சிவகங்கை மருதுவும் சீறிப்பாய…
சூதுத் திரை தகர்க்க சேதுக்கரை தந்த
சூலாயுதமாக தளராத நெஞ்சத்தோடு தருமரும் தன்பங்கு கூட்ட…
அனல் பொழியும் ஆவேசத்தோடு உசிலை தந்த ஐயப்பன் உக்கிரம் காட்ட பொன்னி நதிக்கரையில் இருந்து வெல்ல மண்டியார் விழி சிவந்த வண்ணம் வேகத்தை கூட்ட…
புதுச்சேரி சிவந்த மண் பெற்றெடுத்த கழகத்து பெருவீரர் ஓம் சக்தி சேகர் உடன் நின்று பலம் காட்ட…
கழகத்தை பிடித்து ஆட்டும் கொடுந்துயர்களைந்திட தடந்தோள் தருகின்ற கோபால கிருஷ்னரும் விழி சிவந்து வேகம் காட்ட
இப்படி இன்னும் இன்னுமாக நெறி கொண்ட தீரத்தோடு வெறி கொண்ட வீரத்தோடு லட்சோப லட்சம் கழகத்தின் சிப்பாய்படை ஒப்பில்லா தாய் தந்த தப்பில்லா தங்கமகன் ஓ.பி.எஸ் தலைமை ஏற்று சாதி மதம் மொழி கடந்து சகோதரப் படை கொண்டு …
கழகத்தை ஒற்றுமையால் கட்டிக் காக்க போராடி வருகிறது என்றால் அங்கோ ஆடுவதும் சரி… அபகரிப்புக்கு மூலதனம் போடுவதும் சரி…
வேலு money… தங்க money… என்றானால்…
இதற்கு மேல் விவரமாக எப்படித் தான் சொல்வதோ…’’ என பதிவிட்டிருப்பதுதான் ஓ.பி.எஸ். அணியினரை உற்சாகத்தில் ஆழத்தியிருக்கிறது.
