தி.மு.க. இளைரணிச் செயலாளரும், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் பற்றி பேசியது இந்தியா முழுவதும் பேசு பொருளாகியிருக்கிறது.

இந்த நிலையில்தால் இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், உதயநிதி ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து செங்கோலை பரிசளித்திருக்கிறார். இது பற்றி தூத்துக்குடி உடன் பிறப்புக்களிடம் பேசினோம்.

‘‘சார், தூத்துக்குடி நல்லமலை புதுக்கோட்டையில் இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் இல்லம் முன்பு 100 அடி உயரக் கொடிக்கம்பத்தில் தி.மு.க கொடியேற்றினார் இளைஞரணி மாநிலச் செயலாளரும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

பின்னர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் வகையில், மாநில இளைஞரணி துணைச் செயலாளார் தூத்துக்குடி எஸ்.ஜோயல் செங்கோல் வழங்கினார். இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பைக் கொடுத்தனர்.

விரைவல் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞரணி நிர்வாகிகள் துடிப்புடன் செயலாற்ற வேண்டும் என்று முதல்வரும், கழகத் தலைவருமான ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டிற்கு குடும்பத்துடன் இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என உதயநிதி உத்தரவிட்டருந்தார்.

இந்த நிலையில்தான் தூத்துக்குடியில் இளைஞரணி மாநில துணைச் செயலாளர் தூத்துக்குடி ஜோயலில் வீட்டின் முன்பு 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றி இளைஞரணியினரை உற்சாகப்படுத்தியிருக்கிறார் உதயநிதி. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு தற்போதே இளைஞரணி நிர்வாகிகள் தயாராகிவிட்டனர் என்பதையே காட்டுகிறது, தூத்துக்குடி கொடியேற்று நிகழ்ச்சி’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal