தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் மழை பெய்தது. பகலில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கிய போதும் இரவில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சி நிலவுகிறது. இந்த நிலையில் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 8-ந் தேதி வரை 5 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்திற்குள் நாளை இரவு அல்லது புதன்கிழமை காலை உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal