ஓசூர், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் எடப்பாடி பழனிச் சாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தர விட்டது. இதனை வர–வேற்று, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஓசூர்-ராயக்கோட்டை சாலை, தேர்ப்பேட்டை சந்திப்பு பகுதியில் அ.தி.மு.க. மாநகர பகுதி செயலாளர்கள் ராஜி, அசோக், மஞ்சுநாத் மற்றும் முன்னாள் நகர செயலாளரும், மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான எஸ்.நாராயணன் ஆகியோர் தலைமையில், பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். .
அப்போது கட்சியினர், உயர் நீதிமன்ற தீர்ப்பை வர வேற்றும், எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தியும் கோஷங்களை எழுப்பினர். மேலும் இதில், வட்ட செயலாளர்கள் , மாநகராட்சி கவுன்சிலர்கள், மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்,.