அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மாமன்னர் பூலித்தேவனின் 308-வது பிறந்தநாளான 1.9.2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, நெற்கட்டும்செவல் என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவனுடைய திருஉருவச் சிலைக்கு, அ.தி.மு.க.வின் சார்பில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன், தளவாய்சுந்தரம், செல்லூர் ராஜூ மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

மாமன்னர் பூலித்தேவனுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal