பிரபலமான தனியார் நட்சத்திர ஓட்டலில் நடிகை தங்க சென்றபோது, அங்கே வைக்கப்பட்டிருந்த ரகசிய காமிராவைப் பார்த்து அதிர்ச்சியடைந்து ஓட்டலை விட்டு வெளியேறியிருக்கிறார்.

தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான புரூஸ் லீ படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை க்ரித்தி கர்பந்தா. கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இளம் நடிகைக்குதான் அப்படியொரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

தெலுங்கில் 2009ம் ஆண்டு வெளியான போனி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் க்ரித்தி கர்பந்தா. அதனை தொடர்ந்து கன்னடத்தில் சிரு படத்தில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் சான்டல்வுட்டில் குவிந்தன. அப்படி பெங்களூரில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் நடிகைக்கு இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் நடந்ததாக சமீபத்தில் அளித்த பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

சினிமா ஷூட்டிங்கிற்காக பல இடங்களுக்கு செல்லும் நடிகைகள் அதிகபட்சமாக ஹோட்டல்களிலேயே ரூம் போட்டு தங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சொகுசு ஹோட்டல்களில் செக்யூரிட்டி அதிகம் இருக்கும் என்றாலும், ஒரு சிலர் நடிகைகள் ரூம் போட்டுத் தங்கினால் அவர்களின் அந்தரங்கத்தை பார்த்து விட ரகசிய கேமராக்களை வைத்து ஏகப்பட்ட எம்எம்எஸ் வீடியோக்களையும் லீக் செய்து வருகின்றனர்.

அப்படியொரு அசம்பாவித சம்பவம் தான் சமீபத்தில் நடிகை கிரித்தி கர்பானந்தாவிற்கும் நடந்துள்ளதாக பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். கன்னட படத்தில் நடிப்பதற்காக பெங்களூரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது அங்கே ரகசிய கேமரா வைத்திருந்தது அதிர்ச்சியை அளித்தது என்றார்.

எப்போதுமே நானும் என் அசிஸ்டன்ட்டும் ஹோட்டல்களில் ரூம் புக் செய்தால் ரூமுக்குள் நுழைந்ததும் பாத்ரூம் மற்றும் படுக்கை அறை என அனைத்து இடங்களிலும் ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என்றும் ஏதாவது சந்தேகப்படக்கூடிய பொருட்கள் உள்ளனவா என்பதை பார்த்து விடுவோம்.

அப்படி அன்று அந்த அறைக்குள் நுழைந்ததும் தேடிப் பார்த்ததில், செட் டாப் பாக்ஸ் கீழ் ஒரு ரகசிய கேமராவை ரூம் பாய் வைத்திருப்பதை கண்டுபிடித்து விட்டோம். நல்ல வேளை எந்தவொரு அந்தரங்க வீடியோக்களும் வெளியாகவில்லை என்பதை உணர்ந்து கொண்டு ஹோட்டலை விட்டே உடனடியாக காலி செய்து வேறு ஹோட்டலுக்கு சென்று விட்டோம் எனக் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal