திருமணம் முடிந்த பெண்களுக்கு மாமியார் தொல்லை கொடுத்து கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், மாமனால் ‘பாலியல்’ தொல்லை கொடுத்த விவகாரம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் வள்ளியப்பம்பட்டியை சேர்ந்த வீரப்பன் மகன் சந்திரசேகர் (25). இவர் அமெரிக்காவில் கேட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நதியா(20). திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவர் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டதால் மாமனார், மாமியாருடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்திலும், இரவில் தூங்கும் போதும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், மருமகளிடம் சொத்து, பணம் தருவதாகவும் கூறி கொஞ்சம் அனுசரித்து செல்லுமாறும் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாமியாரிடம் பலமுறை மருமகள் கூறியபோதும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் விடாமல் டார்ச்சர் செய்து வந்துள்ளார். பொறுமை இழந்த மருமகள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மாமனார், மாமியார் தேடி வருகின்றனர். மருமகளுக்கு மாமனார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.