தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலைக்கு ஆள் எடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்ட சபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 685 ஓட்டுநர் உடன் நடத்துநர்கள் நிரப்புவதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி காலியான 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்கள் நிரப்புவதற்கான இணையதளம் விண்ணப்பம் இன்று மதியம் 1.00 மணிக்கு தொடங்கியது.
www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் பயனாளிகள் தங்களது விவரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது. ஆனால் விண்ணப்பம் தொடங்கியது சில நிமிடங்களில் இணையதளம் முடக்கம்(server error) ஆகி உள்ளது.
ஒரே நேரத்தில் 60,000 நபர்கள் விண்ணப்பிப்பதால் இணையதளம் முடக்கம் ஏற்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இணையதளத்தை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் இணையதளம் சரி செய்யப்படும் என போக்குவரத்துதுறை அதிகாரி தெரிவித்துள்ளார்.