பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத் தொல்லையாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம்தான் தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பாரதி வித்யாலயா பள்ளியின் பவள விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழாவில் கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் 408 தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கினார்.
இந்நிலையில் அரசு விழாவுக்காக கிருஷ்ணகிரிக்கு செல்லும் வழியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது . இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி அருகே உள்ள காரிமங்கலத்தில் உள்ல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு அஜீரண கோளாறு, வாயுத்தொல்லை ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அன்பில் மகேஷ் தற்போது நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.