அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில் ராகுல்காந்திக்கு மீண்டும் மக்களவை உறுப்பினர் பதவி கிடைத்துள்ளது.

மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை குஜராத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தது. இதனால் ராகுல்காந்தி மீண்டும் எம்.பியாக நாடாளுமன்றத்தில் நுழைவது உறுதியானது. இந்த நிலையில் ராகுல்காந்திக்கு மீண்டும் மக்களவை உறுப்பினர் பதவி கிடைத்துள்ளது.

இதுகுறித்து மக்களவை செயலகத்தில் இருந்து வெளியான அறிவிப்பில், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal