தமிழக ‘அரசியல்’ களத்தில் அடியெடுத்து வைத்துள்ள நடிகர் விஜய், வெளிநாட்டில் இருக்கும் சமயத்தில் பனையூரில் திடீர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்!

நடிகர் விஜய் விரைவில் அரசியலில் நுழைய உள்ளதால், தன்னுடைய மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் லியோ பட ஷூட்டிங் முடிந்த கையோடு கடந்த மாதம் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பனையூரில் ஆலோசனை மேற்கொண்ட விஜய், அதன்பின் ஓய்வுக்காக வெளிநாடு கிளம்பி சென்றுவிட்டார். தற்போது விஜய் வெளிநாட்டில் உள்ள நிலையில், விஜய் மக்கள் இயக்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி வருகிற ஆகஸ்ட் 5 மற்றும் 6ந் தேதி புதிதாக தொடங்கப்பட்டுள்ள விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாம். நடிகர் விஜய் வெளிநாட்டில் இருப்பதால் இந்த கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தான் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து அவர்களுடன் மட்டுமே ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தற்போது முதன்முறையாக வழக்கறிஞர் பிரிவினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது சில முக்கிய விஷயங்கள் பற்றி விவாதிக்க புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் அறிவுறுத்தி உள்ளாராம்.

தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் வருகை வரவேற்பையும், விமர்சனங்களையும் ஒருசேர பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal