பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற அலுவல் பணியை முடக்கி வருகின்றன. பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த மக்களவை சபாநாயகர், சம்மதம் தெரிவித்த நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து நேரம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் விவாதம் நடைபெறுவதற்கு முன் எந்தவொரு அலுவல் பணியும் நடைபெறக்கூடாது என எதிர்க்கட்சிகள் அமளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சி தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal