அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆகஸ்ட் 4ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அ.தி.மு.க. மாநில மாநாடு வருகிற 20ந்தேதி நடைபெற உள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் மதுரையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்கான பணிகள், ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal