பெண்களை கர்ப்பமாக்கினால் மாதம் ரூ.25 லட்சம் வரை சம்பளம் தருவதாக கூறி வாலிபர் ஒருவரை நூதன முறையில் மோசடி செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் மாகே பிராந்தியத்தில் உள்ள கெஸ்ட் ஹவுசில் நேபாளத்தைச் சேர்ந்த ஷாஜன் பட்டாராய் (வயது34) என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார். இவரை கடந்த மாதம் செல்போனில் ஒரு மர்ம நபர் தொடர்பு கொண்டு தன்னிடம் ஒரு சிறந்த ஆபர் உள்ளது. தாங்கள் ஒத்துழைத்தால் அதிக சம்பளம் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

அதாவது தான் ஒரு குழந்தை பேறு வைத்திய சாலை நடத்தி வருகிறேன். அங்கு வரும் பெண்களை கர்ப்பம் ஆக்கினால் மாதம் ரூ.25 லட்சம் வரை சம்பளம் பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இதற்கு அட்வான்சாக ரூ.2 லட்சம் தரப்படும் என கூறவே ஷாஜன், தனது அடையாள அட்டை, ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அவரது செல்போனுக்கு மர்ம நபரிடமிருந்து குறுந்தகவல் வந்துள்ளது.

அதில் இவர் ஒரு பெண்ணுடன் பாலியல் ரீதியான தொடர்பு கொள்வதற்காக ரூ.5.5 லட்சம் மற்றும் ரூ.1000 ஆகியவற்றை ஷாஜனின் வங்கிக் கணக்கில் செலுத்தியதற்கான போலி ஆவணங்களை அனுப்பி விட்டு விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்தல் கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக கியூ.ஆர். கோர்டை அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து அந்த கியூ.ஆர். கோர்டை ஸ்கேன் செய்து ரூ.50 ஆயிரம் வரை பணத்தை செலுத்தி உள்ளார்.

பின்னர் அந்த மர்ம நபரை ஷாஜன் தொடர்பு கொள்ள முடியவில்லை. கெஸ்ட் அவுஸில் வேலை செய்து சேமித்து வைத்திருந்த பணத்தை இழந்த சோகத்தில் புலம்பியபடி இருந்துள்ளார்.

இது குறித்து புகாரின் பேரில் மாகே இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal