டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பாராளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது: பாராளுமன்ற கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது. இதுபோன்ற திசையற்ற ஒரு எதிர்க்கட்சிகளை இதுவரை கண்டதே இல்லை.

இன்னும் நீண்ட காலம் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்ந்திருக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துவிட்டனர். எதிர்க்கட்சிகளின் தலைவிதி இதுதான். கிழக்கு இந்திய கம்பெனி பெயரில் கூட இந்தியா உள்ளது. இந்தியா என்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் குறித்து கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, பெயரில் இந்தியாவை சேர்ப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது என்று கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal