பாராளுமன்றத்தின் மக்களவையில் அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் குறித்து தெலுங்கானா எம்.பி. கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன் தொகை ரூ.7,53,860 கோடியாக உள்ளது. அதிக கடன் வாங்கியது தமிழ்நாடு தான். இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. உத்தர பிரதேசம் 2-வது இடத்திலும், மகாராஷ்டிரா 3-வது இடத்திலும் உள்ளது  என தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal