தமிழ்நாட்டில் அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதியம் 12 மணி முதல் டாஸ்மாக் திறக்கப்பட்டு விற்பனைகள் நடந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கிடையே தான் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்தால் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதற்கிடையே தான் இன்று அதிரடியாக டாஸ்மாக் நிர்வாகம் மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களின் விலை குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு என்பது அனைத்து குவாட்டர், ஒயின், பீர் என அனைத்து வகையான மதுபானங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வின்படி 330 மில்லி வெட்மென் பில்சென்னர் பீர் ரூ.280ல் இருந்து ரூ.290 ஆக உயர்ந்துள்ளது. 500 மில்லி ஜெர்மணியா பில்ஸ்நர் பீர் (கேன்) ரூ.250ல் இருந்து ரூ.27 ஆகவும், 300 மில்லி ஹாவெர்லி விட் பீர் ரூ.290ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர 750 மில்லி ஸ்காட்ஸ் கிரே பிளென்டெட் ஸ்காட்ச் விஸ்கி ரூ.2000ல் இருந்து ரூ.2240 ஆகவும், 750 மில்லி பிபிடர் ஜின் ரூ.2220 முதல் ரூ.2460 ஆகவும், 750 மில்லி ஜேமிசன் ஐரிஸ் விஸ்கி ரூ.3030 முதல் ரூ.3270 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்சமாக 1 லிட்டர் பிளாக்ஆப் ஸ்கயா வொட்கா பாட்டிலுக்கு ரூ.320 உயர்த்தப்பட்டு ரூ.1980 முதல் ரூ.2, 300 ஆகவும், ஹைலேன்ட் கோல் பிளன்டெட்ன ஸ்காட் விஸ்கி ரூ.320 உயர்த்தி ரூ.2,580 முதல் ரூ.2900 வரையும் விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு மொத்தம் 18 வகையான வெளிநாடு மதுபானங்களின் விலைமை டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக உயர்த்தி உள்ளது. இதனால் குடிமகன்கள் ஷாக்காகி உள்ளனர்.