தி.மு.க.வின் இரண்டாவது ஊழல் பட்டியலில், பினாமிகள் பற்றியும், அவர்களது பெயரையும் வெளியிட இருப்பதாக அண்ணாமலை கூறியிருப்பதுதான் அறிவாலயத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக பொருளாளரும். நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலுவின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அண்ணாமலையை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிடுந்தார். இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று பாஜக தலைவர் அண்ணாமலை ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு ஆகஸ்ட் மூன்றாவது வாரம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் பேசுகையில்,

‘‘ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டதாகவும் அதனால் ஆளும் கட்சியில் பல பேருக்கு கோபத்தை உண்டாக்கியதாகவும், திமுகவின் முதல்வரை உட்பட பல்வேறு தரப்பினர் ஆயிரம் கோடிக்கு மேல் கேட்டு நஷ்ட ஈடு வழக்கு தொடுத்திருப்பதாகவும் அதில் இன்று டி ஆர் பாலு தொடந்து அவதூறு வழக்கில் ஆஜராகி விளக்கம் அளித்ததாகவும் தெரிவித்தார். பாஜகவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் அடுத்த நிலைக்கு சென்று இருப்பதாகவும் குறிப்பாக நீதிமன்றத்திற்கு சென்று இருப்பதாகவும், டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்ததாகவும் அதன் நகல் நான் அளித்து இருப்பதாகவும், அந்த சத்திய பிரமாணத்தில் பல பொய்களை அவர் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.

டி ஆர் பாலு 2004 முதல் 2009 வரை ஊழல் அதிகமாக செய்ததால் தான் அன்று அமைச்சர் அவையில் இடம்பெறவில்லை என்று சொன்னதைக் கூட இந்த வழக்கில் அவர் கூறியிருப்பதாகவும் இதை நான் சொல்லவில்லை 2014 மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அழகிரி கூறியதாகவும் தெரிவித்தார். டி ஆர் பாலு எவ்வாறு ஊழல் செய்தார் எத்தனை கப்பல் வைத்துள்ளார் அதன் மூலம் எவ்வளவு சம்பாரித்துள்ளார் என்று எல்லாம் தெரியும் என்று அழகிரி கூறியதாக அவர் குறிப்பிட்டார் அதற்கு டி ஆர் பாலு, அழகிரி மீது இதுவரை எந்த ஒரு வழக்கம் தொடரவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்?

தமிழ்நாட்டின் மூன்றாம் தலைமுறைக்கும் முதல் தலைமுறைக்கும் சண்டை நடப்பதாகவும் நாட்டிற்கு நன்மை நடக்க வேண்டும் என்று சொல்பவர்கள் முதல் தலைமுறை திமுகவை சேர்ந்தவர்கள் மூன்றாம் தலைமுறை எனவும் கூறினார். இந்த வழக்கானது ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் எப்பொழுது ஆஜராக சொன்னாலும் ஆஜர் ஆகி விளக்கம் அளிப்பேன் என தெரிவித்தவர், நள்ளிரவில் நெஞ்சு வலி வருவதெல்லாம் எங்கள் கட்சியினருக்கு வராது எனவும் தெரிவித்தார். அடுத்த கட்டமாக திமுக ஊழல் பட்டியல் சம்மந்தமான பாகம் இரண்டு தயாராக உள்ளதாகவும் இதில் 300-க்கும் மேற்பட்ட பினாமிகள் மூலமாக சொத்து குவிக்கப்பட்டிருப்பதாகவும்,

பினாமியின் பெயர்களை பொது வெளியில் சொல்வது குறித்தும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் பினாமி பெயரில் வாங்கி இருக்க கூடிய பட்டியலில் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள் எனவும் கூறினார். இந்த ஆதாரங்களை சிபிஐயிடம் வழங்கலாம் என்றால் தமிழ்நாட்டுக்குள் சிபிஐ வரக்கூடாது என்று தமிழக அரசு சட்டம் பிறப்பித்துள்ளது. இரண்டாம் ஊழல் பட்டியல் குறித்து ஆவணங்களை ஆளுநரிடம் சீல் வைக்கப்பட்ட கவரில் வழங்கலாமா அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அவர்களிடம் கொடுப்பதா அல்லது பொதுவெளியில் கொடுப்பதா என்று விரைவில் அறிவிக்க இருக்கிறேன்’’ என அண்ணாமலை கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal