செந்தில் பாலாஜி வழக்கில் நேற்று கபில் சிபல், என்.ஆர்.இளங்கோ எடுத்து வைத்த வாதத்திற்கு எதிராக அமலாக்கத்துறை ஐ.நா., பாகிஸ்தானை வழக்கில் இழுத்து அதிரடியான வாதங்களை வைத்து வருகிறது.

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன் வழக்கு விசாரணைக்கு வந்து உள்ளது.

நேற்று இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு வாதம் முடிந்த நிலையில் இந்த வழக்கில் இன்று அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில், ‘‘இந்த வழக்கு பற்றி பேசும் முன் முக்கியமான ஒரு சர்வதேச விதி பற்றி நான் பேச வேண்டும். 2000ம் ஆண்டு தொடக்க காலம் வரை உலகம் முழுக்க பல நாடுகள் மணி லாண்டரி குற்றச்சாட்டு காரணமாக சிரமப்பட்டு வந்தன.

இதை தடுக்க உலக நாடுகள் ஒன்றி சேர்ந்தன. ஐநா மூலம் இதற்கு எதிராக கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டன. அதை மனதில் வைத்தே இந்தியாவிலும் பிஎம்எல்ஏ சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டது.

உலக நாடுகள் இதற்கு எதிராக கடுமையான சட்டம் இருக்க வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்தன. அதோடு ஐநா நாடுகள் ஒன்றாக சேர்ந்து இதற்காக திவீஸீணீஸீநீவீணீறீ கிநீtவீஷீஸீ ஜிணீsளீ திஷீக்ஷீநீமீ என்ற டாஸ்க் போர்ஸ் ஒன்றையும் கூட உருவாக்கியது. அதில் 40 விதிகளை கொண்டு வந்தது. ஒவ்வொரு நாட்டின் சட்டமும் இந்த 40 விதிகளுக்கு கீழ் இருக்கிறதா என்று பார்த்தது. அதை வைத்து உலக நாடுகளை கருப்பு, கிரே, வெள்ளை என்று தரம் பிரித்தது. பாகிஸ்தான் எல்லாம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பணியில் சரியாக செயல்படாத காரணத்தால் கிரே லிஸ்டில் உள்ளது.

விரைவில் கருப்பு லிஸ்டிற்கு சென்றுவிடும். ஆனால் நாம் விதிகளை முறையாக கடைப்பிடித்து வருகிறோம். இந்த லிஸ்டில் உள்ள 5 உறுப்பு நாடுகள் நம் விதிகளை கண்காணித்து வருகின்றன. நம்முடைய சட்ட நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றன. அதனால் சட்ட ரீதியாக இது போன்ற வழக்குகளில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கு உள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை ஆவணங்களின் அடிப்படையில்தான் கைது செய்தோம்.

கைதில் எங்களுக்கு உரிமை உள்ளது. அதேபோல் அவரிடம் கூடுதல் ஆதாரங்களை வாங்க எங்களுக்கு சட்டப்படி உரிமை உண்டு. அவரை நாங்கள் விசாரிக்க முடியாது என்றால் அது எங்கள் விசாரணை ஆணையத்தின் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஒருவர் தவறு செய்ததாக தோன்றினால் என்னால் அவரை விசாரிக்க முடியும்’’ என்று இன்று அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் வைத்துள்ளார்.

நேற்று செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் வைத்தார். அதில், ‘‘அமலாக்கத்துறை என்பது போலீஸ் கிடையாது. அவர்களுக்கு இருக்கும் கைது அதிகாரம் என்பது வேறு மாதிரியானது. மணி லாண்டரி செய்து இருந்தால், அதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும். மணி லாண்டரி என்பது கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது. அதாவது அழுக்கு துணியை மிஷினில் போட்டு துவைப்பது போன்றது.

பொதுவாக போலீஸ் ஒருவரை விசாரிக்கிறது என்றால்.. ஒரு நபர் குற்றம் செய்தவராக கருத்தப்பட்டால் அவரை விசாரிக்க முடியும். ஆதாரத்தை கண்டுபிடிக்க விசாரிக்க முடியும். ஆனால் அமலாக்கத்துறை விசாரணை செய்ய, கைது செய்ய வேண்டும் என்றால்.. அதற்கு முதலில் ஆதாரம் வேண்டும். கைக்கு ஆதாரம் வந்தால் மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும். ஆதாரத்தை திரட்டுவதற்காக ஒருவரை கைது செய்து அதன்பின் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சக்தி கிடையாது. ஆனால் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு

எதிராக எந்த ஆதாரமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் எதோ போலீஸ் போல இதில் கைது செய்துவிட்டு ஆதாரத்தை கைப்பற்ற முடிவு செய்கின்றனர்.. நான் தவறு செய்தேன் என்று அவர்கள் கருதினால் கூட எனக்கு எதிராக ஆதாரம் இல்லாமல்.. ஆவணமாக ஆதாரம் இல்லாமல் அவர்களால் என்னை கைது செய்யவே முடியாது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் இப்படித்தான் கைது செய்துள்ளனர். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அவரிடமே கூட சொல்லவில்லை’’ என்று கூறி உள்ளார்.

நேற்றைய வாதத்தை விட இன்றைய அமலாக்கத்துறை வைத்துள்ள வாதம்தான் அனல் பறந்தது. இதனால், செந்தில் பாலாஜி இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவே முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal