அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். இந்த நிலையில்தான், பொதுச் செயலாளர் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இபிஎஸ் தரப்பு அளித்த ஆவணங்களையும் இணையதளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்துள்ளது.
அதாவது, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு, தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக முழுமையாக அங்கீகரித்ததை காட்டுவதாக அமைந்துள்ளது.