உயர்நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரிய தனது மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, கே.என். நேரு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை வீசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள், கே. என். நேரு மனுவை தள்ளுபடி செய்து உத்திவுட்டுள்ளனர்.
திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.634 கோடி பணி நியமன ஊழல் வழக்கில் தனக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அமலாக்கத்துறை (ED) அனுப்பிய ரகசியக் கடிதத்தின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரிய தனது மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, கே.என். நேரு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதனிடையே, இந்த விவகாரத்தில் தங்களது தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னரே எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி, லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கெனவே கேவியட் மனுவைத் தாக்கல் செய்யப்பட்டனது. இதனால், கே.என். நேரு தரப்பின் கோரிக்கைகளுடன், லஞ்ச ஒழிப்புத்துறை முன்வைக்கும் வாதங்களும் இன்றைய விசாரணையில் முக்கியத்துவம் பெறும் என எதிப்பார்க்கப்பட்ட நிலையில், கே, என்,. நேரு தாக்கல் செய்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்திவுட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தனியார் பள்ளி அங்கீகாரம் வழங்குவதில் ரூபாய் 100 கோடி லஞ்சம் பெறப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து அவர் அன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மற்றுமொரு திமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி மேற்கு எம் எல் ஏ-வுமான கே. என். நேரு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரும் கைது செய்யப்படலாம்.
