களியக்காவிளை பஸ் நிலையம் முன்பு மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தவறி விட்டதாகவும், அதனை தடுக்க தவறிய மணிப்பூர் மாநில முதல்வர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக கேட்டும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால்சிங் முன்னிலை வகித்தார். போராட் டத்தில் விஜய்வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசி யதாவது:-
மத்திய அரசின் இனவெறி செயல்பாட்டால் மணிப்பூர் மாநிலத்தில் சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் மாநிலத்தில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசும் மத்திய அரசும் அமைதி திரும்ப எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை. இந்திய மக்களுக்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதற்கு பதிலளிக்க முடியாமல் அவர் மீது ஒரு வழக்கை பதிவு செய்து அதிகபட்ச தண்டனையாக அவரது எம்.பி. பதவியை பறித்துவிட்டனர். அவர் தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. எரிகின்ற மணிப்பூர் மாநிலத்தில் ராகுல் காந்தி மக்களிடம் குறைகளை கேட்டு தெரிந்து, மக்களோடு மக்களாக அமைதி திரும்ப போராடிக்கொண்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal