விபச்சார தொழிலும், கடத்தல் தொழிலும் ‘மாற்றி மாற்றி’ யோசித்து செய்து வருகின்றனர். இவர்கள் எப்படி மாற்றி யோசித்தாலும், போலீசாரிடம் சிக்கிக்கொள்கின்றனர்.
சென்னையில் விபச்சாரம் செய்பவர்கள் ஓட்டல்களில் செய்தால் சிக்குவதால், நூதன முறையை கையாண்டுள்ளனர். அதுதான் வீடுகளை வாடகைக்கு பிடித்து குடும்பம் போல் தங்கி விபச்சாரம் செய்வது. அப்படித்தான் சில பகுதிகளில் பெண்கள் குடும்ப விபச்சாரம் செய்து வந்துள்ளார்கள். இது தொடர்பாக கடந்த வாரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து ஆய்வு செய்து, கைது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கையும் எடுத்தனர்.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் பெண்கள் தான் இந்த தொழில்களில் ஈடுபடுவதாகவும், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் இவர்கள் குடும்ப விபசாரத்தை மேற்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
சரி குடும்ப விபசாரம் என்றால் என்ன என்பதை இப்போது பார்ப்போம்… ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி விபச்சாரம் அனுபவித்தபடி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை அழகிகள் உல்லாசப்படுத்துவார்களாம். இதுதான் ‘குடும்ப விபசாரம்’ என சொல்கிறார்கள். இந்த மாதிரியான விபச்சாரம் சென்னையில் தற்போது தான் நடக்கிறது என்று இல்லை..ஏற்கனவே நடந்துள்ளது. அவர்களை போலீசார் கைது செய்தனர். பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார்கள். ஆனால் அடிக்கடி இவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளதாம்.
சென்னையில் எங்கு இதுபோன்ற குடும்ப விபசாரம் நடக்கிறது என்று பார்த்தால் வளசரவாக்கம், மடிப்பாக்கம் பகுதியில் இந்த மாதிரி குடும்ப பெண்களால் விபச்சாரங்கள் நடப்பதாக சொல்கிறார்கள். சந்தேகம் வராத அளவிற்கான பகுதிகளை தேர்வு செய்வார்களாம். தனி வீடுகளை தேர்வு செய்தும் இதுபோன்று விபச்சாரத்தை அரங்கேற்றுவதாக சொல்கிறார்கள். இந்த குடும்ப விபச்சாரத்திற்கு பெண்கள் எப்படி வருகிறார்கள். இவர்கள் யார் என்பது குறித்து விசாரித்த போது, வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. சென்னைக்கு வேலை தேடி வருவது போல் குடும்ப பெண்களே வருகிறார்களாம். அவர்களின் தொழிலாகவே இந்த விபசாரம் உள்ளதாகவும், வேலை தேடுவது போல் வந்து வீடு எடுத்து தங்கி விபச்சாரத்தை சத்தமில்லாமல் செய்கிறார்களாம். நன்றாக சம்பாதித்துவிட்டு ஊருக்கு போய்விட்டு வந்து மீண்டும் வந்து இதேபோல் சம்பாதிப்பார்களாம்.
பொதுவாக இதுபோன்ற குற்றவாளிகளை பிடிக்கும் போலீசார் உடனே அரசின் காப்பகத்தில் சேர்த்துவிடுவார்கள். அவர்களோ தாங்கள் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பிவிட்டு, அரசின் காப்பங்களிலேயே தங்கி இருப்பார்கள். பின்னர் நீதிமன்றத்தில் விடுதலை பெற்ற பின் செந்த ஊருக்கு போவார்கள். அங்கிருந்து சில மாதங்களிலேயே மீண்டும் வந்து வேறுபகுதியில் குடும்ப விபச்சாரத்தை செய்வார்களாம்.
அப்படித்தான் சென்னை வளசரவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் குடும்ப விபசார தொழில் செய்து வந்த மூன்று பெண்கள் மீட்கப்பட்டனர். வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் 2பேரை பிடித்தனர். அவர்களை இந்த தொழிலில் தள்ளிய ரவி (வயது 54) என்ற தரகர் கைதானார். இதேபோல் மடிப்பாக்கம் ராமலிங்க நகர் பகுதியில் ஒரு பெண்ணை பிடித்தனர். அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பிரசாந்த் (30) என்ற தரகர் சிறையில் அடைக்கப்பட்டார்.
காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை அழகிகள் குடும்ப விபச்சாரம் நடத்திய விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.