திமுக அமைச்சரின் மருமகன் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சி.வி.கணேசன் இருந்து வருகிறார். இவரது மருமகன் பொன்னார். திமுகவில் மாவட்ட இலக்கிய அணியின் துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அமைச்சர் சி.வி.கணேசனின் மருமகன் பொன்னார் சேலம் நெடுஞ்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சரின் மருமகன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் கணேசனின் மகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்ததால் அதிருப்தி அடைந்த மருமகன் அதிமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal