அமெரிக்கா மற்றும் எகிப்து நாட்டிற்கு சென்று, இந்தியாவில் தரையிறங்கிய பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி இதுதான்..!

இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். கடந்த 20-ந்தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார்.

அவரை பா.ஜனதா தலைவர் நட்டா மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லெகி ஆகியோர் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றனர். ஜே.பி. நட்டா உடன் ஹர்ஷ் வர்தன், ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், கவுதம் காம்பீர் ஆகிய எம்.பி.க்களும் சென்றிருந்தனர்.

அவர் தரையிறங்கியதும் பா.ஜனதா தலைவர் நட்டாவிடம், ‘‘இங்கே (இந்தியா) என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று கேட்டார். அப்போது, கடந்த 9 ஆண்டுகளில் நம் அரசு செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து கொண்டிருக்கிறோம். நாடு சந்தோசமாக இருக்கிறது என நட்டா தெரிவித்தார்’’ என பா.ஜனதா எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்தார். பிரதமர் தங்களிடம் என்ன கேட்டார் என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு மனோஜ் திவாரி இவ்வாறு பதில் அளித்தார்.

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமீபத்தில்தான் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்த நிலையில்தான் பிரதமர் மோடி இந்தியாவில் தரையிறங்கியதும் முதல் கேள்வி கேட்டிருக்கிறார். இனி ‘அடுத்தடுத்த ஆபரேஷன்’ நடக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal