உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை மேல் முறையீடு செய்த வழக்கு 21ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதே நாளில், அவருக்கு காவிரி மருத்துவனையில் இருதய அறுவை சிகிச்சை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோது நெஞ்சுவலி ஏற்பட்டு செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் சர்ஜரி செய்ய டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என அவரது மனைவியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்றது.

இதனைத்தொடர்ந்து அவர் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். வருகிற 21-ந்தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு மனு வருகிற 21-ம்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal