தல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளார். இவரது சகோதரர் அசோக், உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான ஒப்பந்ததாரர்கள், தொழில்அதிபர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது.

இதையடுத்து நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் வீடுகள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனையின் முடிவில் அதிகாலையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது ஏற்பட்ட நெஞ்சுவலியால் அவர் சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பைபாஸ் சர்ஜரிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரிக்க சுந்தர், சக்திவேல் ஆகிய இரண்டு பேர் அடங்கிய நீதிபதிகள் விசாரிக்க இருந்தனர். இந்த நிலையில்தான் சக்திவேல் இந்த வழக்கில் இருந்து, விலகுவதாக எந்தவித காரணமும் சொல்லாமல் அறிவித்திருக்கிறார்.

இதனால், செந்தில் பாலாஜி மனைவியின் மனுவை விசாரிப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal