தமிழகத்தில் சட்டவிரோதமாக பார்கள் நடத்தியதன் மூலம் இரண்டாயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக சென்னை பட்டினம்பாக்கம் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-

‘‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கு ஏற்ப செந்தில்பாலாஜி கைது உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை ஊரார் கைதட்டி வரவேற்கின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கைதானதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது. சட்டம் தன் கடமையை செய்கிறது. சட்டவிரோத மதுபான பார்கள் மூலம் ரூ.2000 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்து ஆய்வு முடிவை தெரிவிக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி காவலரை எட்டி உதைத்துள்ளார். நெங்சுவலி வந்தால் எப்படி உதைக்க முடியும். இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு அமைச்சர் பதிவியில் இருந்து உடனே செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal