Month: September 2024

வக்பு வாரிய தலைவர் ராஜினாமா? அடுத்தது யார்?

வக்பு வாரியத்தின் தலைவராக இருந்த அப்துல் ரகுமானின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், அடுத்த தலைவர் யார் என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வக்பு வாரியத்தின் தலைவராக இருந்தவர் எம்.அப்துல் ரகுமான். திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான இந்திய…

அமைச்சரவை மாற்றத்திற்கு தேதி குறித்த முதல்வர்!

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களையும் சந்தித்தார். தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு…

ஜாமீன் ஓகே… முதல்வர் சீட் நோ! சுப்ரீம் கோர்ட் செக்!

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய சுப்ரீம் கோர்ட், ‘முதல்வர் அலுவலகத்திற்கு செல்ல கூடாது’ என நிபந்தனை விதித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனையுடன் இன்று (செப்.,13) ஜாமின் வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டின் கண்டிஷன்…

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்… முடிவுக்கு வந்த சிறைவாசம்!

டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் மக்களவை தேர்தலில் பிரச்சாரத்தில் மே மாதம், அவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து…

சினிமாவிலிருந்து விலகமாட்டார் விஜய்! சசிகுமார் சபதம்!

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என்று உறுதிபட சசிகுமார் தெரிவித்துள்ளார். இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘நந்தன்’. செப்டம்பர் 20-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்று…

முதல்வர் நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு! கவர்னர் அதிரடி முடிவு!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இனி பங்கேற்கப் போவதில்லை என்று கவர்னர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு…

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்… சென்னையில் செப்.29ல் ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய; சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் செப்.29-ல் சென்னையில் கண்டன…

மீண்டும் அதிமுகவில் இணைந்த வா.மைத்ரேயன்!

முன்னாள் எம்.பி வா.மைத்ரேயன் அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளார். புற்றுநோய் மருத்துவரான மைத்ரேயன், ஆர்எஸ்எஸ் உறுப்பினராக பொதுவாழ்வைத் தொடங்கினார். 1991-ம்ஆண்டு பாஜக தமிழ்நாடு பிரிவின் செயற்குழு உறுப்பினரானார். 1995 முதல்1997 வரை பாஜக தமிழ்நாடு பொதுச் செயலாளராகவும், 1997 முதல் 1999 வரைதுணைத்…

மகா விஷ்ணு வழக்கறிஞர் திடீர் விலகல்!

சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிய வழக்கில் கைதான மகாவிஷ்ணு தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் விலகினார். மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிறைவடைந்துள்ளது. மகாவிஷ்ணு…

கார் விபத்தில் ஜீவா – மனைவி! உயிர் தப்பிய பின்னணி?

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவியுடன் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு திருப்பியபோது சின்னசேலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது,…