Category: அரசியல்

கலைஞர் 100! காத்திருக்கும் பரிசு! பூங்கோதை ஆலடி அருணா ஏற்பாடு!

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் மற்றும் பனை விதைகளை நடவு செய்து உடன் பிறப்புக்களை உற்சாகப்படுத்தி வருகிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா! தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட இயக்கத்தின் வேரான மு.கருணாநிதியின் ‘கலைஞர் நூற்றாண்டு’ விழா கடந்த…

பிடிவாத இபிஎஸ்! டெல்லியில் அண்ணா மலை! மதில்மேல் கூட்டணி கட்சிகள்!

பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவு என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கும் நிலையில், அண்ணாமலை டெல்லி சென்றிருக்கிறார். அ.தி.மு.க. விலகியதால் கூட்டணிக் கட்சிகளும் மதில் மேல் பூனையாக இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக பாஜகவுடன்…

சீமான் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!

கரூரில் நாம் தமிழர் கட்சியினர் கர்நாடக முதல்வர் சித்தராமையா உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தனர். அப்போது காவல்துறையினர் தடுத்தனர், ஆனாலும்  உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. தருமபுரியில் தொலைத் தொடர்பு…

விசுவாசமில்லாத பண்ருட்டியார்! விளாசிய கே.பி.முனுசாமி!

‘கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் என யாருக்குமே விசுவாசமாக இருக்காதவர்தான் பண்ருட்டி ராமச்சந்திரன்’ என கே.பி.முனுசாமி இன்று விளாசித் தள்ளியிருக்கிறார். அதிமுக பாஜக இடையே கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில் பாஜகவுடனான கூட்டணி குறித்து தனது சென்னையில் அணி நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்…

‘அதிமுகவை உடைக்க மாட்டேன்!’ எஸ்.பி.வேலுமணியின் பதிவு!

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. ‘உடைத்து விளையாடி’ வருகின்றனது. இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வும் கூட்டணியில் இருந்து விலகியதால் எஸ்.பி.வேலுமணியை வைத்து ‘உடைத்து விளையாட’ முயற்சித்த நிலையில் அதற்கு எஸ்.பி.வேலுமணி மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது…

அதிமுகவில் சர்ச்சையை கிளப்பிய கே.சி.கருப்பண்ணன்!

‘பா.ஜ.க.வைப் பற்றி யாரும் பேசவேண்டாம்’ என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கும் நிலையில், ‘வேலியே பயிரை மேய்ந்த கதை’யாக முன்னாள் அமைச்சரும், மா.செ.வுமான கே.சி.கருப்பண்ணன் அ.தி.மு.க. & பா.ஜ.க. பற்றி பேசிய விவகாரம்தான் அ.தி.மு.க.விலேயே அணலடித்துக் கொண்டி ருக்கிறது. அதிமுக -& தமிழக…

சொத்துக் குவிப்பு வழக்கு; மதுரைக்கு மாறிய நீதிபதி

தமிழக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சருக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளின் விசாரணை இனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நடைபெற உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்…

செந்தில்பாலாஜிக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு !!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜுன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். பிறகு காவேரி மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

‘என்றென்றும் எடப்பாடியார் வழியில்…’ ராஜ் சத்தியன் உறுதி!

‘என்றென்றும் எடப்பாடியார் வழியில் பயணிப்பேன்…’ என்று அ.தி.மு.க.வின் மாநில ஐ.டி.விங் செயலாளர் ராஜ் சத்தியன் அறிவித்திருக்கிறார். அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளராக வி.வி.ஆர். ராஜ் சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அனைத்திந்திய…

தி.மு.க. மா.செ.க்களுக்கு திடீர் அழைப்பு!

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ஜ.க.வை வெளியேற்றிய நிலையில், தமிழக தேர்தல் கூட்டணிக் களம் நிறம் மாறுகிறது. இந்த நிலையில்தான் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள்…