மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மை நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் தவெகவும், தாராபுரம் தொகுதியில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது. அண்மை நிலவரம்:

மதுராந்தகம் முன்னிலை நிலவரம்:

தவெக – மரகதம் குமரவேல்: 20,068

திமுக – பரந்தாமன்: 13,687

அதிமுக – கனிதா சம்பத்: 11,442

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகி ராமன் (நாம் தமிழர்) மற்றும் சுயேச்சைகள் என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மதுராந்தகத்தில் 86.26%, வாக்குகள் பதிவாகின. 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தாராபுரம் முன்னிலை நிலவரம்:

அதிமுக – பானுமதி: 9,308

தவெக – சத்யபாமா: 8,977

திமுக – சுகன்யா: 7,098

தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தாராபுரத்தில் 80.25% வாக்குகள் பதிவாகின. அங்குள்ள 320 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal