இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் எம்.பி. சுப்பராயனின் மகன் பாரதி சுப்பராயன். திருப்பூர் நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவரான பாரதி சுப்பராயன் இன்று அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரை மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது நவீன மனிதர்கள் அமைப்பின் நிர்வாகிகளும் தங்களை திமுகவில் இணைந்து கொண்டனர்.

இதுகுறித்து திமுக எக்ஸ் பதிவில்,‘‘கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (08.10.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன் தலைமையில், அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்தன், செயலாளர் வி. சுரேஷ், பொருளாளர் ஆர். பிரகாஷ் சந்திரன், துணை பொருளாளர் எ. செந்தில்குமார், துணைச் செயலாளர்கள் ராஜா, சி. ஜேம்ஸ், தமிழ்செல்வன், சிவசந்திரன், மற்றும் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அப்போது, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா, திருப்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தினேஷ் ஆகியோர் உடனிருந்தனர்’’ என புகைப்படத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal