மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 57 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு… ‘‘ ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கான கைது அதிகாரம் ரத்து செய்யப்படுகிறது.
குற்றவியல் வழக்கு தொடர்வதற்கான வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.
குறைந்தபட்ச தண்டனை நீக்கப்பட்டு, அபராதம், சிறை தண்டை அல்லதஇரண்டும் என ஒவ்வொரு வழக்கிலும் விதிக்கப்படும், தண்டனை வழங்குவதை நீதித்துறை முடிவுக்கு விடப்படுகிறது.
குறிப்பிட்ட அபராதம் எதுவும் வழங்கப்படாதஇடங்களில் பொருந்தும் பொதுவான அபராதம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக குறைகிறது.
தாமதமாக தாக்கல் செய்யும் தவறு செய்யும் அல்லது பணம் செலுத்துவதில் தாமதம் செய்பவர்களுக்கு வசூல் வட்டி மற்றும் விகிதாச்சார அபராதத்தை மட்டுமே எதிர்கொள்வார். அதற்கு மேல் எதுவும் இல்லை
ஜிஎஸ்டி தாக்கல் மற்றும் பணம் திரும்பப்பெறும் முறைகளில் தளர்வு செய்ய வேண்டும்’’ என முடிவு செய்யப்பட்டது.
வரி விகிதம் தொடர்பான விஷயங்கள் ஆண்டுக்கு ஒரு முறை, அதற்கு என பிரத்யேகமாக நடக்கும் கூட்டத்தில் மட்டுமே விவாதிக்கப்படும்.
